தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் வலம் வருபவர் டேனியல் பாலாஜி. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில், அசுரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் நடிகர் டேனியல் பாலாஜி நடித்துவரும் நிலையில், தற்போது தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் டேனியல் பாலாஜி தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக தற்போது ஒரு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இவர் சென்னைக்கு அருகே ஆவடியில் ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலை காட்டியுள்ளார். மேலும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து மகிழ்ந்தனர்.