
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டவர் தான் நிரவ் மோடி. வைர தொழிலதிபரான இவர் மோசடியில் ஈடுபட்ட பிறகு வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இவரது சகோதரரான நேஹல் மோடி, நிரவ் சாட்சிகளை அளிக்க உதவி செய்துள்ளார். இதன் காரணமாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய்தது.
பெல்ஜியம் குடியுரிமை பெற்ற இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் இன்டர்போலிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இரு அமைப்புகளின் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்ட இன்டர்போல் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. இந்நிலையில் அவரை அமெரிக்கா காவல்துறையினர் கைது செய்தனர். அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.