
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகள் மஞ்சள், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுகிறது. நவீன வசதிகள் கொண்ட மஞ்சள் நிற அரசு பேருந்துகளை முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்.
மேலும், 1,000 புதிய பேருந்துகள் வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.