
பொதுவாக வங்கிகள் மக்களின் பணத்தை பாதுகாப்பாக வைக்கவும், வருங்கால தேவைக்காக பணத்தை சேமிக்கவும் பயன்படும் ஒரு அமைப்பாகும். வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளுக்கு வங்கிகள் பல்வேறு வழிகளில் கடன் உதவிகள் செய்து வருகிறது. இந்நிலையில் வங்கிகளில் வைப்பு கணக்குகளில் இருப்புத் தொகை குறித்து ரிசர்வ் வங்கிகள் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு வங்கிகளும் குறிப்பிட்ட தொகையை இருப்புத் தொகையாக வங்கி கணக்குகளில் வைத்திருக்க வேண்டும். யூனியன் பாங்க் ஆப் இந்தியா பூஜ்ஜியம் இருப்பு கணக்குகளை கொடுக்கிறது. இந்த வங்கிகளில் குறைந்தபட்சம் இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வங்கி கணக்குகளும் ரூபாய் 100,ரூபாய் 250,ரூபாய் 500 குறைந்த பட்சம் இருக்க வேண்டும். HDFC பேங்குகள் பூஜ்ஜிய இருப்பு கொடுக்காது.இந்த வங்கிகளில் குறைந்தபட்சம் இருப்பு தொகை ரூபாய்2500 இருக்க வேண்டும்.
கிராமப்புற பகுதிகள்,நகர்புற பகுதிகள் பொறுத்து இந்த இருப்பு தொகை ரூபாய் 1000, ரூபாய் 2000, ரூபாய் 5000, ரூபாய் 10000 வரை மாறுபடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அக்டோபர் 15ஆம் தேதி முதல் வழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து வேறு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர உள்ளன என்பதும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு அடுத்து தெரிய வரும்.