இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு அத்தியாவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் அடிக்கடி அப்டேட் செய்து கொள்வது அவசியம். முதலில் ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்காக 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது அந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த சலுகையை ஜூன் 14-ஆம் தேதி வரை மட்டுமே பெற முடியும். அதற்குள் ஆதார் கார்டில் ஏதேனும் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்றால் மை ஆதார் இணையதளத்திற்குள் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் ஆதார் மையத்திற்கு சென்றால் கண்டிப்பாக 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கு எந்த விதமான சலுகையும் வழங்கப்படாது. மை ஆதார் இணையதளத்தில் மட்டும் தான் ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆதார் கார்டு புதுப்பிக்கும் போது சரியான ஆவணங்களை விண்ணப்பிப்பதோடு சரியான விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவேளை உங்கள் விவரங்கள் தவறாக இருந்தால் ஆதார் புதுப்பிப்பு நிராகரிக்கப்படும். எனவே சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம். மேலும் யுஐடிஏஐ இன் இந்த சலுகையை பயன்படுத்தி ஆதார் கார்டை ஜூன் 14-ஆம் தேதிக்குள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.