இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பெரும்பாலும் லாக்கர் வசதிகள் வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்படுகிறது. இந்த லாக்கரில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணம் மற்றும் நகை போன்றவர்களை பாதுகாப்பாக வைக்கும் நிலையில் அதற்கு வங்கிகள் கட்டணமும் வசூலிக்கிறது. வங்கிகளில் உள்ள லாக்கர் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையாக பணம் மற்றும் நகை போன்றவற்றை வைக்கிறார்கள்.

இந்நிலையில் வங்கியில் உள்ள லாக்கரில் இருந்து சில சமயங்களில் பணம் அல்லது நகைத் திருடப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி தீ, கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற இயற்கை பேரிடர்களால் லாக்கரில் இருக்கும் பணம் மற்றும் நகைகளுக்கு சேதாரம் ஏற்பட்டால் அதற்கு வங்கிகள் பொறுப்பு கிடையாது. இது தொடர்பாக வங்கிகளும் முன்னதாகவே வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும்.

ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி வங்கிகள் லாக்கருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதோடு 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்களை வைத்து கண்காணிக்கவும் வேண்டும். 180 நாட்கள் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை வங்கிகள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். லாக்கரிலிருந்து பணம் மற்றும் நகை திருடப்பட்டால் அதற்கு வங்கிகள் பொறுப்பு கிடையாது. ஒருவேளை லாக்கரில் நடைபெறும் மோசடிகளுக்கு வங்கி ஊழியர்கள்உடந்தையாக இருந்தால் லாக்கரிலிருந்து காணாமல் போகும் பொருட்களுக்கான முழு பொறுப்பையும் வங்கிகளே ஏற்க வேண்டும்.