ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினோர் நகரில் கார் ஒன்றில் தனது உறவினர்கள் உடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதற்காக பிஜுனூரில் உள்ள தம்பூருக்கு காரில் தனது உறவினர்களுடன் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார் தேசிய நெடுஞ்சாலை 74 இல் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த டெம்போ மீது வேகமாக மோதி உள்ளது. இதில் இரண்டு வாகனங்களும் எதிரெதிரே மோதியதால் அருகே உள்ள பள்ளத்தில் சரிந்துள்ளது. புதுமணத் தம்பதியின் காரில் 11 பேர் இருந்துள்ளனர். இதில் புதுமண தம்பதிகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர்.

மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் கூறியதாவது, காலையில் நெடுஞ்சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் எதிரே வரும் வாகனம் தெரியாத சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அம்மாநில முதல் மந்திரி ஆதித்யநாத் யோகி இரங்கல் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடையவும் இறைவனை வேண்டுவதாக கூறினார்.