காலகட்டம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளில் மேற்கத்திய கழிப்பறைகள் அதிகரித்து வருகிறது. எந்த கழிப்பறை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டின் உட்புறம் மிக மாடார்னாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் வீடுகளை வடிவமைக்க ஆரம்பித்தார்கள்.

அப்படித்தான் மேற்கத்திய கழிப்பறைகளும் வந்தது. மேற்கத்திய கழிப்பறைகள் வசதியில் சிறந்தது என கூறினாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் இந்திய கழிப்பறைகள் பார்ப்பதற்கு வசதி குறைவாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. தினசரி உடற்பயிற்சி மிக முக்கியம் என தெரிந்தும் நாம் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கிறோம். ஆனால் இந்திய கழிப்பறையில் அமர்ந்து எழுந்தாலே அது உடற்பயிற்சி தான்.

அதை Squatting Method என கூறுகிறார்கள். இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கை கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. இந்திய கழிப்பறையில் அமரும் அமைப்பு வயிற்றுக்கும் பெருங்குடலுக்கும் நல்ல அழுத்தம் கொடுத்து மலக் கழிவுகள் முழுமையாக வெளியேற உதவுகிறது.

இதனால் மலச்சிக்கல், குடல் அலர்ஜி, பெருங்குடல் புற்றுநோய் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் மற்றும் நடு வயதினர் இந்திய கழிப்பறைகளை பயன்படுத்தினால் உடலுக்கு நல்லது. அதுபோல கால் வலியால் அவதிப்படுபவர்கள், உட்கார முடியாதவர்கள், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மேற்கத்திய கழிப்பறைகளை பயன்படுத்தலாம். அது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.