விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றனர். இந்நிலையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் குஜராத் மொழியில் “சுப் யாத்ரா” எனும் பெயரில் ஒரு படத்தை தயாரித்து உள்ளனர்.

இந்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கியிருக்கிறார். இதில் மல்ஹார் தாக்கூர் மற்றும் மோனல் கஜார் ஆகிய இரண்டு பேரும் இணைந்து நடித்திருக்கின்றனர். மோனல் கஜார் தமிழில் வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார்.