சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு உதவ, டிராகன் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த மீட்பு முயற்சிக்காக ஃபுளோரிடாவின் கேப் கேனவரல் விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளை தொடர்வதற்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. டிராகன் விண்கலத்தின் மூலம் அவர்கள் பாதுகாப்பாக பூமிக்கு  திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.