
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையை பதவியில் இருந்து மாற்ற பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்தான் அடுத்த பாஜக மாநில தலைவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சட்டசபை வளாகத்தில் ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் நயினாரின் இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகு, அதிமுக மற்றும் பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பேச்சு வார்த்தை கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.