டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனும், இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்து உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.