கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்துக்கு நடத்துநர்களுக்கான ஆள்சேர்ப்பு நடைபெற்றது. இதற்குரிய உடற்தகுதி தேர்வு கலாபுரகி மாவட்டத்தில் இன்று(பிப்.10) நடந்தது. இதில் தேர்வர்களின் உயரம் மற்றும் எடையை அளவிடும் போது சிலரது நடவடிக்கைகளில் சந்தேகம் நிலவியது. அதன்பின் அவர்களது ஆடைகளை கழற்றி சோதித்ததில் எடையை அதிகரித்து காட்டுவதற்காக கற்கள், இரும்பு ஆகியவற்றை உடலில் வைத்து கட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 4 பேருக்கும் தேர்வு எழுத அதிகாரிகள் தடைவிதித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது “பிடிபட்ட 4 பேரும் உயரத்தில் தகுதி பெற்றிருந்தனர். எனினும் எடை குறைவாக இருந்ததால், இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் தன் உள்ளாடைக்குள் சுமார் 5 கிலோ எடை கொண்ட கற்களை கட்டி வைத்திருந்தார்” என்று கூறினார்.