சென்ற ஓராண்டாக பால் விலையை உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கமளித்த மத்திய பால்வளத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யாண் கூறியதாவது “பால் நிறுவனங்கள் சில்லறை விலையில் 75 சதவீதத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது. நுகர்வோர் மற்றும் விவசாயிகள் மத்தியில் சமநிலையை ஏற்படுத்துவது அவசியம் ஆகும்.

விவசாயிகள் பால் பண்ணையை சிறப்பாக நடத்துவதற்கு, பாலுக்கு அதிக வருமானம் கிடைக்கவேண்டும். அண்மை காலமாக கால்நடை தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், பாலின் விலையும் உயர்ந்துள்ளது. ஆகவே கால்நடை தீவனங்களின் விலை குறைந்தால் பாலின் விலையும் குறையும்” எனக் அவர் கூறினார்.