தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் எனக்கே பிடிக்காது. மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க சென்ற போது என்னால் முழுமையாக அதை பார்க்க முடியவில்லை. அதோடு என்னை திரையில் நானே பார்ப்பது என்பது வெட்கமாக இருந்தது.

என்னால் என் நடிப்பை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் மக்கள் தங்களுடைய உழைப்பால் உண்டான பணத்தையும், நேரத்தையும் கொடுத்து சினிமா பார்க்கின்றனர். அதற்குரிய பொறுப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு படம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் வெறும் நடிகர், இயக்குநருடன் சம்பந்தபட்டதல்ல. ஏனெனில் அதில் பெரும்பாலான விஷயங்கள் அடங்கியிருக்கிறது என்று விஜய்சேதுபதி கூறியுள்ளார்..