கன்னட சினிமாவில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் நல்ல வரவேற்பை பெற்றதால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் என தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் ரிஷப்செட்டியும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை கங்கனா ரணாவத், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்ற பல பிரபலங்கள் பாராட்டியிருந்தனர்.

அந்த வகையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் காந்தாரா திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, நான் இப்போதுதான் காந்தாரா படத்தை பார்த்தேன். தட்சிண கன்னடாவின் வளமிக்க கலாச்சாரத்தை இப்படத்தின் மூலம் அறிந்து கொண்டேன். கடினமான சூழலிலும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து செய்யும் ஒரு சில பகுதிகளில் இதுவும் ஒன்று என அமித்ஷா கூறியுள்ளார். மேலும் காந்தாரா திரைப்படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியதை படக் குழுவினர் அண்மையில் கொண்டாடினர்.