ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப் பெரிய சரிவை சந்தித்திருக்கிறது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ கடன் வழங்கி இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை 2 நாளாக முடக்கியது.

இந்நிலையில் நாடு முழுவதும் எஸ்பிஐ, எல்ஐசி அலுவலகங்கள் வாயிலில் காங்கிரஸ் கட்சியினர் நாளை(பிப்,.6) போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து PM மௌனம் காப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ், அதானி குழுமத்தில் முதலீடு செய்ய மோடி அரசு எவ்வாறு பொது நிறுவனங்களை வற்புறுத்தி உள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த போராட்டம் நடக்க உள்ளதாக கூறியது.