ஐபிஎல் தொடர் மூலம் அறிமுகமானவர் நிதிஷ்குமார் ரெட்டி. இவர் தற்போது இந்திய அணியில் விளையாடி சாதித்து காட்டியுள்ளார். இவர் இந்திய அணிக்காக மூன்று டி20 போட்டிகளில் விளையாடி அதில் 74 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார். இதில் பேட்டிங்கில் அவர் மொத்தமாக 298 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் அதிக ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளா.ர் இந்த நிலையில் தனது வாழ்க்கையே மாறிய நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அவர் முட்டி போட்டு படி ஏறி சுவாமி தரிசனம் செய்தார். இது ரசிகர்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனது இந்த நிலைக்கு கடவுளின் ஆசிர்வாதம் தான் காரணம் என்று கூறிய அவர் ஏழுமலையான் கோவிலில் கடினமான முறையில் தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினார். இதனால் அங்கு இருந்த ரசிகர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கம் மிட்டனர். முன்னதாக ஆஸ்திரேலிய தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை பார்க்க அலாரம் வைத்து எழுந்து பார்ப்பேன். ஆனால் தற்போது ஆஸ்திரேலியா மண்ணில் முதல் தொடரை விளையாடி இருக்கிறேன். எனக்கு ஒரு வீரராகவும் ஒரு மனிதனாகவும் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் இந்த தொடரை நினைத்தபடி முடிக்கவில்லை இருப்பினும் நாங்கள் மீண்டும் பலமான ஒரு அணியாக திரும்புவோம் என்று கூறினார்.