
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இருந்தது. இதையடுத்து பயிற்சியாளர் கௌதம் காம்பீர், கேப்டன் ரோஹித் சர்மாவுடனும், தேர்வு குழு தலைவர் அகர்கர் இடையேயும் மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிக்காரித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ யின் துணைத் தலைவர் ராஜீவ சுக்லா கூறியதாவது, காம்பீருடன் ரோகித் சர்மாவுக்கும் அகரகருக்கும் இடையே எந்த மோதல்களும் இல்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் தவறானது. ரோகித் சர்மா பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லாததை உணர்ந்ததால், அவர் சிட்னி டெஸ்டில் இருந்து விலகினார்.
விளையாடும் போது நல்ல நிலையில் இருப்பதும் மோசமாக இருப்பதும் நடப்பது தான். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி வருகிற 18 அல்லது 19ம் தேதி இறுதி செய்யப்படும் என்று அவர் கூறினார். சாம்பியன்ஸ் டிராபி போட்டி வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்களை அறிவித்து விட்டனர். ஆனால் இன்னும் இந்தியா மட்டும் பாகிஸ்தான் அணிகள் வீரர்களின் பட்டியலை வெளியிடவில்லை.