பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி ராமதாஸும் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் இருப்பவர் மருத்துவர் அய்யா.

செயல் தலைவராக அய்யாவால் அறிவிக்கப்பட்டவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். இந்நிலையில் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய அய்யா அவர்கள் மட்டுமே நீக்கவும் நியமிக்கவும் அதிகாரம் படைத்தவர். எனக்கு பாமகவில் நிறைய பொறுப்புகளை கொடுத்தது அய்யா ராமதாஸ் தான். பாமக நிறுவனர் ராமதாசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் அன்புமணி ராமதாஸுக்கு என்னை நீக்குவதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார்.