தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானார் ஜாக்குலின். இதன் மூலம் பிரபலமான அவருக்கு நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாத நிலையில் தேன்மொழி சீரியலில் நடித்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் நீங்கள் லெஸ்பியனா என கேள்வி கேட்டார். அதற்கு ஜாக்குலின் பதிலளித்துள்ளதாவது, மூன்று நண்பர்களுடன் போட்டோ போட்டாலும் இப்படி தான் பேசுவார்கள். ஏன் என்னை இந்த மாதிரி நினைக்கிறாங்க. அவர்களுக்கு என்ன அப்படி உறுத்துகிறது. என்னை மட்டும் கிடையாது. இதுபோல பல பிரபலங்களையும் இப்படிதான் கூறுகிறார்கள் என்று ஆவேசமாக பேசி இருக்கின்றார்.