
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டாவா ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிளாட்பார்ம் எண் 2ல் ஒரு பயணி கொண்டு வந்த கடுகு எண்ணெய் சிந்தியது. அதனால் ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயன்ற பயணிகள் அடிக்கடி வழுக்கி விழ ஆரம்பித்தனர்.
அந்த சூழலில் RPF வீரர்களும் அந்த எண்ணெய் வழுக்கலால் பாதிக்கப்பட்டனர். அந்த எண்ணெய் சிதறியதற்கான காரணம், ஒரு பயணியின் எண்ணெய் நிரப்பிய கொள்கலன் தவறி விழுந்ததால் அப்பகுதியில் முழுவதும் எண்ணெய் சிந்தி ‘ கிடந்துள்ளது.
🚨 इटावा : रेलवे प्लेटफॉर्म पर फैला सरसों का तेल 🚨
🛤️ यात्री और RPF जवान प्लेटफॉर्म पर फिसले
📍 इटावा रेलवे स्टेशन के प्लेटफार्म नंबर 2 का मामला#Etawah #RailwayAccident #OilSpill #PlatformSafety @RPF_INDIA @RailMinIndia @RailwaySeva pic.twitter.com/OdgulXPg4S— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) May 27, 2025
இதனையடுத்து, சில நிமிடங்கள் அப்பகுதியில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து உடனே, நிலைய நிர்வாகம் செயல்பட்டு, துப்புரவு பணியாளர்களை அழைத்து நடைமேடையை சுத்தம் செய்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், இத்தகைய அலட்சியமான சூழ்நிலைகள் ஒரு பெரிய விபத்திற்கும் வழிவகுக்கக் கூடியவை என்பதால், பயணிகள் மற்றும் ரயில்வே நிர்வாகம் இருவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை நிலவுகிறது.