உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க், ஓபன் ஏஐ நிறுவனத்தை ரூ.9.74 பில்லியனுக்கு வாங்கிக் கொள்வதாக அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் துளியும் விருப்பமில்லாத அந்நிறுவனத்தின் சிஇஓ ஆன அல்ட்மேன், மஸ்கிடம் உங்களுக்கு ஓகே என்றால் இதே விலைக்கு உங்களது எக்ஸ் நிறுவனத்தை வாங்க தயாராக இருப்பதாக அவர் பதிலடி கொடுத்தார். எலான் மஸ்க் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் வலது கையாக மாறியுள்ளார்.

எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். அதன் பின் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தில் இருந்து எலான் மாஸ் விலகினார். அதிலிருந்து இந்த தொழில்நுட்ப தொடக்கத்தை யார் வழி நடத்துவது என்பது குறித்து இவர்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகிறது.