AEW Dynamite நிகழ்ச்சியில் ஜான் மாக்ஸ்லி மற்றும் கோப் என்பவருக்கு இடையில் நடைபெற்ற AEW உலக சாம்பியன் “street fight” போட்டி ரத்தம் பிழியும் வகையில் கடுமையானதாக இருந்தது. அதாவது இவர்கள் இருவருக்கும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தளத்தின் நடுப்பகுதியில், கோப் தனது பயங்கரமான ஸ்பைக் என்ற ஆணிகள் பதிக்கப்பட்ட பலகையை ஆயுதமாக கொண்டு வந்தார்.

போட்டியின் போது கோப் மாக்ஸ்லியை வீழ்த்துவதற்காக அவரை தூக்கி தரையில் போட்ட போது நடுப்பகுதியில் இருந்த அந்த ஆயுதத்தின் மீது விழுந்த மாக்ஸ்லியின் முதுகில் ஆணிகள் பதிந்து ரத்தக்கசிவை ஏற்படுத்தியது. இந்த பரிதாபமான நிலையிலும், தன்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் டெத்ரைடர் குழுவின் வீலர் யூட்டா, கிளாடியோ மற்றும் பாக் ஆகியோர்களின் உதவியுடன் மாக்ஸ்லி தனது AEW சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக பெற்றுள்ளார். மேலும் கோப்பின் முயற்சி வீணான நிலையில் அவர் தோல்வியை தழுவினார்.