
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானம் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. இதனை போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இதில் 50 கிலோ உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரிய வந்ததாவது, இவர்கள் பாங்காக்கில் இருந்து சென்னை வரும் விமானத்தில் உயர்ரக கஞ்சாவை உணவு பண்டங்கள் வைத்த பொட்டலங்கள் மூலம் கடத்தி வந்துள்ளனர்.
இதில் 1 கிலோ 300 கிராம் கஞ்சா கிடைத்துள்ளது. கஞ்சாவின் மதிப்பு 100 கிராம் 1 லட்சம் ரூபாய் ஆகும். வெளிநாட்டில் இருந்து தடை விதிக்கப்பட்ட கஞ்சா போதை பொருளை விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி கொண்டுவரப்பட்ட இந்த உயர்ரக கஞ்சா வகைகள் சினிமா துறையில் உள்ள பிரபலங்களுக்கு விற்பதற்காக கடத்திவரப்பட்டது என விசாரணை முடிவில் தெரியவந்தது.