
சமீபத்தில் இணையத்தில் சிரிப்பலை ஏற்படுத்தும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு டாக்ஸி பயணத்தின் போது நடந்த மிகவும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ ஆரம்பத்தில், ஒரு பயணி வாகனத்திற்குள் ஏறி, அங்கிருந்த ஒரு குட்டி குழந்தையை தள்ளி உட்கார வைத்து விட்டு அருகில் அமருகிறார். சில வினாடிகளில், டிரைவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த அழைப்பில், ஒரு பெண் பேசுகிறார் – ‘‘என் மகனை நான் டாக்ஸியில் மறந்து விட்டேன்… தயவுசெய்து மீண்டும் கொண்டுவந்து விட முடியுமா?’’ எனக் கேட்டார்.
View this post on Instagram
அதை கேட்ட டிரைவர் ஆச்சரியத்தில் உறைந்தார். உடனே அருகில் இருந்த பயணியிடம் திரும்பி, ‘‘இந்த பையன் உங்கள் மகனா?’’ எனக் கேட்டார். அதற்கு பயணி அமைதியாக தலைஅசைத்து, ‘இல்லைங்க, அவன் உங்க பையனுன்னு நினைச்சேன்” என பதிலளிக்கிறார். பின்னர், அந்த தாயார் குழந்தையைத் திருப்பி அழைக்கச் சொல்கிறார்.
இந்த காட்சிகள், காரின் கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. மேலும் சிலர் பெற்றோரின் கவனமின்மை குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம், நகைச்சுவை கலந்த விடியோவாக இருந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர்.