சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள  பிலாஸ்பூரைச் சேர்ந்த அஜிதா பாண்டே, ஒரு சாதாரண நர்ஸ் மட்டுமல்ல அவர்  விலங்குகளை நேசிக்கும் வீராங்கனை. மருத்துவப் பணியில் இரவு, பகலென உழைக்கும் அவர், பாம்புகளை மீட்டு உயிர் காக்கும் தொழிலையும் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளில், அஜிதா பாண்டே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு காட்டில் பாதுகாப்பாக விட்டுள்ளார். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில், பாம்பு மீட்பு பணிகளை தொடர்ந்து செய்து வந்ததற்காக, உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது சிறுவயதிலேயே அஜிதா பாண்டேக்கு பாம்புகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு, ஒருநாள் வீட்டில் பாம்பு வந்ததையடுத்து ஆரம்பமானது. அப்போது இருந்து, பாம்புகளை பற்றிய அறிவை படித்து தெரிந்து கொண்டு, பெரும்பாலான பாம்புகள் விஷமில்லாதவை என்பதை அறிந்து, மனிதர்கள் அச்சப்படாமல் உண்மைகளை அறிந்து நடக்க வேண்டும் என கூறுகிறார்.

கடந்த மார்ச் 2017 முதல் ஜூலை 2021 வரை, 984 பாம்புகளை மீட்டு, வனத்துறையின் அனுமதியுடன் காட்டில் விட்டுள்ளார். இந்த முயற்சிகளுக்காக சமூக ஊடகங்களில் “பாம்புப் பெண்”, “பாம்பு மீட்பாளர்” என அழைக்கப்படும் அவர், இப்போது அதிகரிக்கும் பாம்பு மோதல்கள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அஜிதா, “பாம்பு வந்து விட்டால், அதை கொல்ல வேண்டாம்… நிபுணரிடம் தெரிவியுங்கள், நாம் ஒரு உயிரை காப்பாற்றலாம்” என மக்களிடம் கேட்டுக்கொள்கிறார். @invincible._aj என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாம்பு மீட்புப் பணிகளை வீடியோவாக பகிர்ந்து, வேதிப்பொருள் பயன்பாடின்றி பாம்புகளை கையாளும் விதத்தை உணர்த்தி வருகிறார்.

ஒரு பெண், தனது சுயநலக் கடமையை கடந்து, உயிர்களின் பாதுகாப்புக்காக உழைக்கும் அவரது இந்த செயல், இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான ஊக்கமளிக்கும் கதையாக அமைந்திருக்கிறது. “பாதுகாப்பும், பரிவும் ஒரே நேரத்தில் செயல்படக்கூடியது” என்பதை அஜிதா பாண்டே தனது செயலால் நிரூபித்துள்ளார்.