இந்திய நீதிபதியான யஸ்வந்த் வர்மா கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது தீயணைப்பு வீரர்கள் மூலம் எரிந்த நிலையில் 4 முதல் 5 முட்டைகளில் கட்டு கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் 3 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நீதிபதி யஸ்வந்த் வர்மா டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டிலிருந்து பணம் மீட்கப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் விசாரணை குழு இந்த விவகாரம் தொடர்பான முழு அறிக்கையையும் சமர்ப்பிக்கும் வரை யஸ்வந்த் வர்மா எந்த வழக்கையும் விசாரிக்க கூடாது என்றும், அவருக்கு நீதிமன்ற பணிகள் ஒதுக்க கூடாது என்றும்  உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.