கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் சினேகா என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் கோபி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். மேலும் அதற்கு பணம் செலவாகும் என தெரிவித்தார். கோபி கூறியதை நம்பி சினேகா வேலை வாங்கி தருவதற்காக அவரிடம் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி கோபி வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை.

இதுகுறித்து சினேகா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கோபி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு விசாரணை முடிந்தால் தான் கோபி இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் மோசடி செய்திருக்கிறார் என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.