சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மேட்டு தெருவில் வசிக்கும் உசைன் அலி என்பவர் திருச்செங்கோட்டில் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு உசைன் அலிக்கு ஜான் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை சப்ளை செய்துள்ளார். அதற்கான பணத்தை உசைன் அலி கொடுக்கவில்லை. இதுகுறித்து ஜான் சேலம் மாநகர மத்திய குற்ற்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் உசேன் அலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.