மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து உற்சாகமாக மரியாதை செய்துள்ளார்.
கடந்த சில காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த மேடை நாகரீகம் அமைந்திருந்தது.
பிரதமர் மோடியை மலர்ந்த முகத்துடன் வரவேற்ற ஈபிஎஸ், அவருடன் சிறிது நேரம் ஆலோசனையும் நடத்தினார். மார்ச் 1-ம் தேதியான இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு, வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான உறவு அடுத்த கட்டத்திற்குச் செல்வதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மதுரை மண்ணில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடந்த இந்தச் சந்திப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
