மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் (எம்என்எஸ்) முக்கிய தலைவரான ஜாவேத் ஷேக்கின் மகன் ரஹில் ஜாவேத் ஷேக், மும்பை அந்தேரி பகுதியில் குடிபோதையில் ஒரு பெண்ணின் மீது காரை மோதியதோடு,  அப்பெண்ணை மிரட்டல் நடவடிக்கைகள் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்களிடையே கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், சமூகவலைதளங்களில் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கும் ராஜ்ஸ்ரீ மோர் எனும் பெண்.

அவர் அளித்த புகாரின்படி, ரஹில் ஜாவேத் ஷேக் குடிபோதையில் இருந்ததுடன், அரைநிர்வாணமாக தமது காரை மோதியதோடு, தந்தையின் அதிகாரத்தை பயமுறுத்தும் வகையில் பயன்படுத்தி மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, மும்பையின் அம்போலி போலீசார் ரஹிலிடம் எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த விவகாரம் அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவையும், அவரது கட்சியையும் கடுமையாக விமர்சித்து, “மராத்தி பெருமையை காப்பதாக கூறும் எம்என்எஸ் தலைவர் மகன், மராத்தி பேசும் பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறார். இது என்ன மரியாதை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முஸ்லிம் அழுத்தத்துக்காக, இந்துக்களை மிரட்டுகிறார்களா என்றும் அவர் கேட்டுள்ளார்.

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், இளைஞரின் சமூக பொறுப்பின்மையை மட்டும் அல்லாமல், அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களது செல்வாக்கை எப்படிக் கடுமையாக தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதையும் வெளிக்கொணர்கிறது. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி, நீதிமுறையை நிலைநாட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.