பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அன்மொல் கஹன்(35). இவர் ஒரு பாடகி. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
அப்போது சுற்றுலா கலாச்சாரத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தவர். கடந்த 2024 ஆம் ஆண்டு மந்திரி சபையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அன்மோல் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாகவும், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
அதற்கான ராஜினாமா கடிதத்தை இன்று கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுவதாகவும் அன்மொல் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஏன் என்பதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. அதேவேளை பஞ்சாப் மாநிலம் முதல்வர் பகவந்த்மான் தலைமையிலான ஆட்சியில் அன்மொலுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும், அதனால்தான் அரசியலை விட்டு அவர் முழுவதுமாக வெளியேறி உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
