இரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட கடுமையான பதற்றம், மத்திய கிழக்கு நாடுகளை அதிர்வடையச் செய்துள்ளது. ஈரான், இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தாக்கியதன் விளைவாக, இஸ்ரேல் அதற்கான பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் செய்யும் தவறுக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் போர், அண்மையில் லெபனானில் ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் கொன்றதன் காரணமாக மேலும் தீவிரமடைந்தது. இதன் விளைவாக, ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை குறிவைத்து தொடர்ந்துவரும் தரைவழி தாக்குதலால், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை மோசமடைந்துள்ளது.

இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து, பல நாடுகள் ஆவலுடன் எதிர்காலத்தை கண்காணித்து வருகின்றன.