
மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. காப்பீடு திட்டத்தில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் ஒருவருக்கு தலா ரூபாய் 4,500 அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.