
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போலி போன் கால்ஸ் மற்றும் SMS-க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விதியின் படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் ஆப்ரேட்டர்கள் இனி URL-கள், ஓ டி டி இணைப்புகள் அல்லது APK கோப்புகளை கொண்ட செய்திகளை அனுப்ப முடியாது. இதை தவிர நெட்வொர்க் ஆப்ரேட்டரின் அனுமதி பட்டியலில் இல்லாத கால்பேக் எண்களும் தடுக்கப்படும். இதன் மூலம் ஸ்கேம் மற்றும் பிஷ்ஷிங் செய்திகளை தடுக்கலாம்.
இருப்பினும் இது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த நடவடிக்கை போலி செய்திகள் மற்றும் மோசடியில் இருந்து பாதுகாப்பதற்கு உதவும்.
இந்த புதிய அமைப்பில் பதிவு செய்ய நிறுவனங்கள் செய்திகளை அனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் செய்தியின் உள்ளடக்கங்களை ஸ்கேன் செய்து பதிவு செய்யப்பட்ட வடிவத்துடன் செய்தி பொருந்துகிறதா என்பதை தீர்மானிக்கும் அமைப்பு பயன்படுத்தும். பதிவு செய்யப்பட்ட வடிவங்களுடன் பொருந்தாத செய்திகள் தடுக்கப்படும்.
இந்த மாற்றம் சில சேவைகளுக்கு ஆரம்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். ஆப்ரேட்டர்கள் புதிய அமைப்புகளை செயல்படுத்துவதற்கு நேரமாகலாம். இந்த நடவடிக்கை வங்கிகள், நிதி நிறுவனம் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பல சவால்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் இதன் மூலம் போலி செய்திகளை எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய படியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நடைமுறையை முழுமையாக செயல்படுத்த சிறிது காலம் ஆகலாம் என்று கூறுகின்றனர்