செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நியூஸ் கிளிக்கை பொறுத்த வரைக்கும் உங்களுக்கு தெரியும்,  நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, அமெரிக்காவில் ஒரு ஆர்டிகல் எழுதுறாங்க. குறிப்பாக எப்படி சில நபர்கள் சீனாவின் பணத்தை உள்ளே கொண்டு வந்து சில பத்திரிகையை சாதகமாக பயன்படுத்துறாங்க. அப்படிங்கறது தான் நியூயார்க் டைம்ஸ் ஆர்டிகல்.

அது சம்பந்தமாக நியூஸ் க்ளிக் ஆபீஸ்ஸை ரெய்டு பண்ணி, பணம்  எப்படி வந்திருக்குன்னு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? இந்திய இறையாண்மைக்கு எதிராக…  சைனீஸ் பணத்தைக் கொண்டு வந்து  ஒரு மீடியாவை பயன்படுத்தும் போது, அதை  எதிர்ப்பது என்னுடைய கடமை மட்டுமல்ல, மீடியாக்களுடைய  கடமை.

எத்தனையோ  மீடியாக்கள் இங்கே இருக்குறீங்க. உன்னதமான வேலை செய்யிறீங்க. நீங்க இல்லைனா ஜனநாயகம் இன்னைக்கு இல்ல. மீடியா கண்டிப்பா இருக்கனும். கண்டிப்பா இருக்கனும் என்று சொல்வதைவிட,  மீடியா இருந்தால் தான் ஜனநாயகம். அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என தெரிவித்தார்.