கர்நாடக மாநிலம் மண்டியா அருகே உள்ள பாண்டியபுரத்தில் அல்தாப் என்பவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் வழக்கத்தை அல்தாப் கொண்டுள்ளார். ஆனால் பரிசுத்தொகை எதுவும் பெரிதாக கிடைத்ததில்லை. இம்முறை வயநாடு சென்ற அவர் ரூபாய் 500 கொடுத்து திருவோணம் பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். இந்நிலையில் என்.ஜி.ஆர் லாட்டரி என்ற தமிழர் ஒருவர் நடத்தும் கடையில் அவர் வாங்கிய டிக்கெடிற்கு ரூபாய் 25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

இந்த லாட்டரி பணம் தனது 2 குழந்தைகளின் திருமணத்தை வெகு விமச்சையாக நடத்த உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி போட்ட கண்டிஷனான உத்தரவால்தான் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதில் வயநாட்டிலிருந்து ரூ 1000 கொடுத்து 2 லாட்டரிகளையும் அல்தாப் வாங்கி வந்து அதில் ஒன்றை தனது நண்பருக்கு கொடுக்க நினைத்துள்ளார்.

ஆனால் அல்தாபின் மனைவி நண்பருக்கு கொடுக்கக் கூடாது 2 லாட்டரிகளையும் நாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதற்கு மறுநாளே குலுக்களில் நண்பருக்கு கொடுப்பதற்காக அல்தாப் எடுத்துச் சென்ற லாட்டரி எண்ணிற்கு ரூபாய் 25 கோடி பரிசு தொகை விழுந்துள்ளது. இப்படியாக மனைவியின் பிடிவாதத்தால் தற்போது அல்தாப் குடும்பம் மகிழ்ச்சியில் திகைத்துள்ளது.