தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருகிறது. ஏதேனும் வேலைக்கு சென்று கொண்டே மாணவர்கள் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலைநிலைக் கல்வியில் படித்து வருகிறார்கள். மற்ற பல்கலைக்கழகங்களை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திலும் ஏராளமான மாணவர்கள் தொலைதூர கல்வி மூலமாக பயின்று வருகிறார்கள். MBA படிப்பில் மட்டும் சென்னை பல்கலைகழகத்தில் அதிகபட்சமாக 8000 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிப்புக்கான செமஸ்டர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் இன்று(ஜன.,13) வெளியாகிறது. தொலைநிலை இளநிலை பட்ட, எம்பிஏ தேர்வுக்கான முடிவுகள் கல்வி திட்டத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 6 மணிக்கு தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.