பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் அரசு மீது தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹே லெஸ் ரோஸ் பகுதியின் மேயர் வின்சென்ட் குடும்பத்தினர் மீது போராட்டாக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. யாரோ செய்த தவறுக்கு குழந்தைக்கு காயம் ஏற்படும் அளவிற்கு போராட்டக்காரர்கள் நடந்து கொண்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கலவரம் மற்றும் சூறையாடலில்  ஈடுபட்டதற்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே 719 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.