
ஹைதராபாத் பஞ்சாரா பகுதியை சேர்ந்த 20 பேர் குறிப்பிட்ட ஒரு கடையில் மோமோஸ் சாப்பிட்டு உடல் நலக் கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ரேஷ்மா பேகம் என்ற பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணையில் மோமோஸில் வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் உயிரிழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கானா அரசு முட்டை வைத்த தயார் செய்யப்படும் மயோனைஸ்ஸை விற்பதற்கும் தயாரிப்பதற்கும் ஒரு வருட காலம் தடை விதித்துள்ளது.