8-வது ஊதியக்கமிஷன் பற்றி நாடு முழுவதும் பல்வேறு வித கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் 8-வது ஊதியக்கமிஷன் நடைமுறைபடுத்தப்படுமா?, அப்படி அமல்படுத்தப்படும் எனில் எப்போது நடக்கும்? என பல கேள்விகள் இருக்கிறது. 2024 பொதுத்தேர்தலுக்கு பின் அரசாங்கம் அதை நடைமுறைக்கு கொண்டுவரக்கூடும் என சொல்லப்படுகிறது. அதன்படி புது ஊதியக்குழுவை அரசாங்கம் விரைவில் அமைக்கக்கூடும். அவ்வாறு புது ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அகவிலைப்படியுடன் சம்பளம் தொடர்ந்து அதிகரிக்கும். எனினும் 8-வது ஊதியக்குழுவின் அமைப்புக்கு பிறகு தான் சம்பள திருத்தம் நடக்கும்.

8வது ஊதியக்குழு தொடர்பாக இப்போதைக்கு அரசு சார்பாக எந்த முன்மொழிவும் இல்லை. இருப்பினும் ஊதியக்குழு அமைக்கும் காலம் இன்னும் வரவில்லை என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன் காலக்கெடு 2024 ஆம் வருடத்தில் துவங்கும். வரும் 2024 ஆம் வருடம் பொதுத் தேர்தலுக்கு பின் புதிய அரசாங்கம் அமைந்ததும், இதுபற்றி முடிவு எடுக்கப்படலாம் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக்குழுவில் பிட்மெண்ட் பாக்டரின் அதிகபட்சமான வரம்பின் கீழ் குறைந்தபட்ச சம்பளம் ரூபாய்.26000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.