மார்ச் மாதம் ஜனவரி 2023-க்கான அகவிலைப்படியை அரசாங்கம் 4% அதிகரித்தது. இப்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4% அகவிலைப்படியை பெறத் துவங்கியுள்ளனர். தற்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். ஜூலை மாத அகவிலைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்திருக்கிறது. இச்செய்தி ஊழியர்ளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.