நடப்பாண்டுக்காண ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் 1 இல் கொல்கத்தா, பெங்களூர், ராஜஸ்தான், சென்னை, பஞ்சாப் ஆகிய அணிகளும், குரூப் 2 வில் ஹைதராபாத், டெல்லி, குஜராத், மும்பை, லக்னோ ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் ஒரு முறையும் தங்களது, குழு ஆணியுடன் இரண்டும் முறையும் மோத உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்காக தீவிர பயிற்சியில் சச்சின் டெண்டுல்கர் ஈடுபட்டு வருகிறார்.