
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் வசித்து வந்தவர் ஒரு பள்ளி மாணவர். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவர் கொலாரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள குதித்துள்ளார். இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தும் வேகத்தில் நிறுத்த முடியவில்லை. இதனால் ரயில் முன்பு பாய்ந்த மாணவன் பலத்த காயமடைந்தார்.
இது குறித்த அறிந்த காவல்துறையினர் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையில் இந்த மாணவர் பயின்ற பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குறித்து வீடியோ ஒன்றை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அந்த மாணவர் ஆசிரியர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தன்னை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்க நினைப்பதாகவும், படிக்கும் சக மாணவர்களையும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவதாகவும், மேலும் தன்னுடைய டியூஷனில் தான் கட்டாயம் படிக்க வேண்டும்.வேறெங்கும் டியூஷன் சென்றால் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளதாகவும் வீடியோவில் தெரிவித்து இருந்தார். இது குறித்து காவல்துறையினர் அந்தப் பள்ளி ஆசிரியரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.