நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். தோட்டக்கலை இணை இயக்குனர் ஷிபிலா மேரி வரவேற்றார்.

இதனையடுத்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ரிப்பன் வெட்டி காய்கறி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் சுமார் 2 டன் காய்கறிகளால் பல்வேறு சிற்பங்கள் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட சிற்பங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.