தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மாமன்னன் திரைப்படம் தான் உதயநிதியின் கடைசி படம்.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவின் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.