ஸ்மார்ட் டிவிகளுக்கு ஆன்லைன் தளங்களில் ஒன்றான பிளிப்கார்டு தள்ளுபடிகள் அறிவித்து, அதனை இன்னும் மலிவு விலைகளாக மாற்றுகிறது. தற்போது ஸ்மார்ட் டிவிகளுக்கான தள்ளுபடி விபரம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

Infinix Y1 Smart Linux TV

Infinix Y1 Smart Linux டிவி ஆனது ரூபாய்.16,999 என விற்கப்பட்டு வந்த நிலையில், இப்போது பாதி விலைக்கு கிடைக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் 47 சதவீத தள்ளுபடியுடன் ரூபாய்.8,999 என கிடைக்கிறது. பிரைம் வீடியோ, யூடியூப் ஆகிய ஓடிடி அணுகல் இதில் கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் வாயிலாக இது இயங்குகிறது. அதோடு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் எல்இடி பேனல் ஆதரவு இருக்கிறது. 4gp ரேம் இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட் டிவி.

Toshiba Smart TV

Toshiba Smart டிவி ஆனது புல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆகும். 43 இன்ச் அளவு கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி ரூபாய்.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த டிவிக்கு 28% தள்ளுபடி கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்டில் ரூபாய்.24,990க்கு வாங்கலாம். அதோடு நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகைகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஆக்ஸிஜன் ப்ளே, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லைவ் என பல்வேறு ஓடிடி அணுகலை கொண்டிருக்கிறது. 20 வாட்ஸ் பவர்புல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுல் என ஏணைய ஆடியோ அவுட் அம்சங்கள் இதில் உள்ளது. இந்த டிஸ்ப்ளே 1080 பிக்சல் ஆதரவை கொண்டுள்ளது.