பரம்பொருள் அறக்கட்டளையின் நிர்வாகியான மகாவிஷ்ணு, தனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவில், தனது முழு பேச்சையும் கேட்காமல் தனக்கு எதிராக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கைதானதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், வீடியோ தொகுப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
மகாவிஷணுவின் இந்த மன்னிப்பு கோரிக்கை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
