தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசை அமைப்பில் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் உட்பட பல உச்சநட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கருப்பு நிற சட்டையில் கம்பீரமாக போஸ் கொடுக்கும் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட்டான போட்டோ தற்போது இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.